May 20, 2026

மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டதால் சர்ச்சை

சென்னை: ​மாற்​றுத்​திற​னாளி​கள் அமைப்​பினருட​னான முதல்​வர் விஜய்யின் சந்​திப்பு வீடியோ சமூக வலை​தளங்​களில் பரப்​பப்​பட்​டது சர்ச்​சை​யாகி​யுள்​ளது.

தமிழக முதல்​வரை, பல்​வேறு காரணங்​களுக்​காக பல அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள், முக்​கிய​மான தனி​நபர்​கள் சந்​திப்​பது வழக்​கம். அவ்​வாறு சந்​திக்​கும் போது, தமிழக அரசின் செய்​தித்​துறை சார்​பில் புகைப்​படம், செய்தி வெளி​யிடப்​படும்.

இந்​நிலை​யில், தமிழக முதல்​வர் விஜய்​யை, நேற்று காலை மாற்​றுத்​திற​னாளி​கள் அமைப்​பு​களின் நிர்​வாகி​கள் சந்​தித்​தனர். இந்த சந்​திப்பு தொடர்​பான படங்​கள் அரசு செய்​தித் துறை​யால் வெளி​யிடப்​பட்​டது.

இதற்​கிடையே, நேற்று பிற்​பகல் இந்த சந்​திப்பு தெடார்​பான வீடியோ பதிவு, சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இந்த வீடியோ அதி​கள​வில் பகிரப்​பட்ட நிலை​யில், சர்ச்​சை​யானது.

குறிப்​பாக, அதில் ஒரு அமைப்​பைச் சேர்ந்த பெண் நிர்​வாகி, முதல்​வரிடம் மாற்​றுத்​திற​னாளி துறைக்கு அதி​காரி​யாக நியமிக்​கப்​படு​பவர், வேறு துறை​களுக்​கும் பொறுப்​பாக இருப்​ப​தால் ஏற்​படும் பிரச்​சினை குறித்து தனது கருத்தை தெரிவிக்​கிறார்.

அவர்​கள் அளித்த மனுக்​களை முதல்​வர் பார்​வை​யிடு​கிறார். இந்த வீடியோ வெளி​யான நிலை​யில் யார் எடுத்து வெளி​யிட்​டது என்ற கேள்வி எழுந்​தது. ஆய்​வில், மாற்​றுத்​திற​னாளி​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் பா.சிம்​மச்​சந்​திரன் எடுத்து அனுப்​பியது என்​பது உறு​தி​யானது.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “எங்​கள் துறைக்கு பொறுப்​பேற்​றுள்ள முதல்​வருக்கு நன்றி கூற சென்​றிருந்​தோம் அப்​போது, உதவித் தொகை ரூ.6 ஆயிரம் உயர்த்​த​வும், வேலை​வாய்ப்​பில் 3 சதவீதம் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​த​வும், மாற்​றுத்​திற​னாளி​கள் எளி​தாக அணுகக்​கூடிய வகை​யில் வசதி​கள் செய்து தரவும் கோரிக்கை வைத்​தோம்.

அவர் எங்​கள் கோரிக்​கைகளை கனிவுடன் கேட்​டார். முதல்​வருடன் ஃபோட்டோ எடுக்க வேண்​டும் என ஆர்​வத்​தில் அதை செய்​தேன். செல்ஃபி மாதிரி வீடியோ எடுத்​து, எனது குரூப்​பில் ஆர்​வக்​கோளாரில் பகிர்ந்​தேன். தவறு எங்​கள் மீது தான்.

இதை சமூக ஊடங்​களில் தவறு​தலாக பரப்பி விட்​டார்​கள். அவர் எங்​களிடம் 45 நிமிடங்​கள் மனம் விட்டு பேசி​னார். இதை சிலர் தவறாக சமூக ஊடகங்​களில் பரப்​பிய​தால், நாங்​கள் அவரை சந்​தித்து பேசி​யது எல்​லாம் வீண் ஆகி​விட்​டது” என்​றார்.

Spread the love