September 15, 2026

பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 மாவட்ட செயலாளர் பரமசிவம் பங்கேற்பு

 பழனி மே 23

 பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் பங்கேற்றார். பழனியில் தனியார் மண்டபத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பழனி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கு பழனி நகர அதிமுக செயலாளர் யூ முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் கே எஸ் என் வேணுகோபால் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி குமாரசாமி சிறப்பு உரையாற்றினார். அதன் பின்பு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக புதிய மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் பரமசிவம் பேசியதாவது.

 அதிமுக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் அதிமுகவில் பதவி சுகம் அடைந்தவர்கள், பொய்யான அறிவுரைகளை கூறி, தவறான நிலைப்பாட்டை எடுத்து, த.வெ.க.விற்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் இன்று அமைச்சர் பதவி கிடைக்காமல் 25 எம்எல்ஏக்களும் தனி மரமாக நிற்கின்றனர். புதிய ஆட்சிக்குப் பின் தமிழகத்தில் திமுக தனித்து விடப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்த அனைத்து கட்சியினரும் வெளியேறிவிட்டனர். ஆனால் நமது கூட்டணி அப்படியே தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மேற்குஒன்றிய செயலாளர் நடராஜன், ஆயக்குடி பேரூர் செயலாளர் சசிகுமார்,  நிர்வாகிகள் பண்ணாடி ராஜா, வழக்கறிஞர் ஏடிஎஸ் சிவராஜ பிரபு, ஸ்வீட் கடை எம்ஜிஆர் கருப்புசாமி, இரா சந்திரன், நெய்க்காரப்பட்டி ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சுராங்கனி கணேசன், தாராபுரம் பெரியசாமி, ப.இ.தண்டபாணி, ஆ மு மாரப்பன், பால்ராஜ், ஐ.இ.சரவணன், வர்த்தக அணி பாலகிருஷ்ணன், சங்கர் அண்ட் கோ எஸ் குமார், அரிமா ஏ சுந்தரம், பூக்கடை சாதிக், நகரத் துணைச் செயலாளர் முருகன், சிவசுப்பிரமணி, செல்வக்குமார், முத்துக்குமார், சக்திவேல், வீரமணி, பிரவீன் குருசாமி, ஆயக்குடி கலீல் ரகுமான், எஸ் கார்த்திகேயன், டெய்லர் கணேசன், சரவணன், அப்துல் காதர், ரஞ்சித், வழக்கறிஞர் சேனாபதி, கணேசமூர்த்தி, வெங்கட்ராமன், மானூர் முருகேசன், கவுன்சிலர் ராஜு, சத்யா நகர் நாகராஜன், ஓட்டுநர் மாதவ துரை, ஆர் எம் டி சி கதிர்வேல், உட்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

 போட்டோ புட் நோட் 

பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் பேசினார். அருகினில் முன்னாள் எம்பி குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, நகர செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உள்ளனர் 

Spread the love