September 15, 2026

மதுரையில் நடைபெற்ற ரோமான்சிங் பிரிண்ட் 2026 அச்சுத் துறைக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி.

மதுரையில் நடைபெற்ற ரோமான்சிங் பிரிண்ட் 2026 அச்சுத் துறைக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி. இன்று மதுரை மடீட்சியா அரங்கில் ஆல் இந்தியா பெடரேசன் ஆப் மாஸ்டர் பிரிண்டர்ஸ் மற்றும் மதுரை மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் மடோபா இணைந்து நடத்திய வருங்கால அச்சகத் துறை குறித்து ரோமான்சிங் பிரிண்ட் 2026 என்ற ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. பெடரேஷன் பொருளாளர் பி. சம்பத்குமார் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கே ஏ. முஜீப், இணைச் செயலாளர் பி வி. சதீஷ்குமார், மேனாள் தலைவர் ஏஎம்எஸ்ஜி. அசோகன் முன்னிலை வகித்தனர். மடோபா தலைவர் கே. ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார், செயலாளர் ஆர்.ஐயப்பன், துணைத் தலைவர்கள் வீ. வெங்கட் ஆனந்த், கிருஷ்ணகுமார், பொருளாளர் கே ஆர். ரவி, இணைச் செயலாளர் பி. கார்த்திகேயன் கருத்தரங்க நிகழ்வினை ஒருங்கிணைந்தனர். டெக்னோவா எம். ராஜசேகரன், ஹைடில்பெர்க் பிரபாகரன் அண்ணாமலைச்சாமி, ராஜசிவா சுப்பிரமணியன், ஆட்டோ பிரிண்ட் நமது நிறுவனத் தலைவர் ஜெயகார்த்திகேயன் மகன் ஜெ.நடராஜன் மற்றும் டி. விஜயகுமார், விநாயகா ஸ்கிரீன் எல். ராமநாதன், ரெடிங்டன் ஜினேஷ்குமார் ஆகியோர் கருத்தரங்கத்தில் பேசினர். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மற்றும் மடோபா நிறுவனத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வாய்மையும் மேன்மையும் என்ற தலைப்பில் 52 நிமிடங்கள் கருத்துரை ஆற்றுகையில் பாரதியின் புதியன விரும்பு, உடலினை உறுதிசெய், நன்று கருது, பெரிதினும் பெரிது கேள் என்ற வரிகளுக்கு வடிவம் தரும் பணிதான் இந்தக் கருத்தரங்கம். மக்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும், எதிலும் எப்போதும் வாய்மை தனித் திறன் மிக்கது, அதைத் தான் நமது முன்னோர்கள் மூலதனமாகக் கொண்டார்கள் என்றார். பருவத்தே பயிர் என்பது ஔவையின் அமுதமொழி , எந்தக் காரியத்தையும் உரிய காலத்தில் செய் என்கிறார். அதேபோல நேர்பட வொழுகு – நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்துகொள் என்கிறார் நமது ஔவை. செய்கிற தொழிலில் முழு ஈடுபாடு இருந்தால் வாய்மையும் மேன்மையும் இயல்பாக வரும். சரியான புரிதல், சரியான செயல்பாடு, சரியான சிந்தனை மிக முக்கியமானது என்றார். தி மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேசன் மேனாள் தலைவர் மோகன்ராம் வரைந்த ஓவியம் மனிதத்தேனீ க்கும் மற்ற விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து 200 க்கும் அதிகமான அச்சக உரிமையாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அச்சகம் தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது. சிறப்பான ஏற்பாடுகளை மடோபா செயல்வீரர்கள் ஜி. கார்திக், லெட்சுமணன், சுந்தர்ராஜன், ராகுல் ரவி, எஸ்பி எஸ். சரவணன், செந்தில், சுரேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பாகச் செய்திருந்தனர். தமிழின் தலைநகர் மதுரையில் நடைபெற்ற ஒரு மகத்தான தொழில் கருத்தரங்கமாக அமைந்தது.

Spread the love