சென்னை: ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? முதல்வருக்கு அதற்கான நேரத்தை கொடுங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் குஷ்பு மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கஷ்டப்படும் தயாரிப்பாளர்களின் நலனுக்காக சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம்.
கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறோம் என முதல்வரும், அமைச்சர் ராஜ்மோகனும் தெரிவித்தனர். முதல்வர் விஜய்யை எனது தம்பி என்று சொல்வதற்கு எனக்கு பெருமையாக உள்ளது. ஒரு அக்காவாக அவரை இப்போது பார்த்ததும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
அவரது செயல்பாடுகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரப்போகிறார் என தெரிகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ரொம்ப கஷ்டமான விஷயம். யாரும் அப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
நம்சமுதாயத்தில் இந்த மாதிரி மிருகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த உடன் அனைத்தையும் சரிப்படுத்த வேண்டுமென்றால் எப்படி முடியும்? இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மாற்றி மாற்றி ஆட்சி செய்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே, 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டுவர முடியும்? முதல்வருக்கு அதற்கான நேரத்தை கொடுங்கள்.
உங்கள் தந்தையும், நீங்களும் இத்தனை ஆண்டுகளாக கொண்டு வரமுடியாத மாற்றத்தை விஜய் பத்து நாட்களில் எப்படி கொண்டுவர முடியும். நிச்சயமாக மாற்றம் வரும். அதற்காகத்தான் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
மீண்டும் கட்சி தாவிய டாக்டர் பா.சரவணன் – உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து தவெகவில் ஐக்கியம்
பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்
“குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது” – காங். எம்.பி ஜோதிமணி கருத்து