ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சியின் செயற்குழுக் கூட்டம் நகர் தலைவர் முகமது ஜலீல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட தீர்மானம் எடுக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஜெமீல், கட்சியின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், கீழக்கரையில் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா:
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மாயாண்டி கோவில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு