தமிழ்நாட்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே மாதம் 2022 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு படிப்படியாகத் தற்பொழுது சென்னை, நெல்லை, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒத்துழைப்பு நல்க வேண்டுகோள்
- இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பணியாளர்களிடமிருந்து புகார்கள் கடந்த காலங்களில் வந்த வண்ணம் இருந்தன.
- பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை வழியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பிரதான கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு உள்ளது.
- அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
- மேலாண் இயக்குநர், அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை சரி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்தும் கடைகள் திறக்கப்படவில்லை.
- சென்னை உயர் நீதிமன்றம் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தலில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அதே அளவு பணியாளர்களுக்கும் பொறுப்பு உண்டு.
- இதனை செயல்படுத்த பணியாளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும்.
காலி மதுபான பாட்டில்கள் விவகாரம்
இந்நிலையில் பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளிமுகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி உயர் நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் (affidavit) அளித்து, வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றும் வண்ணம், அவர்கள் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவு போட்ட கிம்!முழு விவரம்
டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுகோள்
எனவே, பணியாளர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து, பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்மொழியும் இத்திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு இன்று முதல் வழக்கம் போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியாக ஆட்களை நியமிக்க கோரிக்கை
முன்னதாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்ப பெற தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.

More Stories
சிங்கப்பெண் அதிரடிப்படை: தொடக்க விழா ஒத்திவைப்பு – பின்னணி என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு
முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம் – பிரதமர் மோடியை சந்திப்பதாக தகவல்