September 15, 2026

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடி, அமித் ஷா, சோனியா, ராகுல் உடன் சந்திப்பு

தமிழக அரசியலில் முதலமைச்சரின் டெல்லி பயணம் பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதிலும் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்.எல்.ஏக்களை தவெகவிற்குள் இழுப்பதாகவும், தூய சக்தி என்ற பிம்பம் உடைபடுகிறது எனவும் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.\

  • இன்னும் சற்று நேரத்தில் டெல்லி புறப்படும் முதல்வர் விஜய்சென்னையில் விமான நிலையம் நோக்கி செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து காவலர்கள் ஒழுங்குபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் டெல்லி செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு முதல்வர் விஜய் வரவுள்ளார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • டெல்லியில் தமிழக முதல்வர் விஜய் பயணத் திட்டம்
  • காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் விஜய் டெல்லி புறப்படுகிறார்.
  • நண்பகல் 12.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.
  • மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • பிரதமர் மோடியின் அலுவலகமான சேவா தீர்த் பவனில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது
  • மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார்.
  • இரவு 7.30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குகிறார்.
  • இன்று இரவு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்திக்கிறார்.
  • நாளை காலை காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
  • இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
Spread the love