தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக 59 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், அக்கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பதுடன் அக்கட்சியின் அமைச்சரவையிலும் பங்கேற்றிருக்கிறது. இந்தசூழலில் தான், கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், திமுக – அதிமுக கூட்டணி பேசப்பட்டதாலேயே அக்கூட்டணியில் இருந்து யாரிடமும் தெரிவிக்காமல் வெளியேறியதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.
தவெக – காங்கிரஸ்web
இதைத் தொடர்ந்து, இரு கட்சி தொண்டர்கள் இடையேயும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

More Stories
திமுகவின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த மதிமுக தலைவர் வைகோ
தவெகவுக்குப் படையெடுக்கும் அதிமுகவினர்.. பட்டியலில் இணைந்த Ex அமைச்சர்!
“4 எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்” – அதிமுக எம்.பி தனபால்