தஞ்சாவூர்: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) லிபரேசன் கட்சி சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட்(எம்எல்) மாநில நிலைக் குழு உறுப்பினர் அ.சிம்சன், நாகை எம்.பி. வை.செல்வராஜ், எம்எல்ஏக்கள் க.மாரிமுத்து, டி.லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 4 மாநிலங்களுடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு மாநிலமும் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் புதிய கட்டுமானங்களில் ஈடுபட முடியாது.
ஆனால், கர்நாடக அரசு அதை மீறி நடந்து கொள்வது இரு மாநில மக்களிடையே நல்லுறவைக் கெடுக்கும். காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை நிலைநாட்டி தமிழகஅரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
முந்தைய ஆட்சியாளர்களைப் பின்பற்றி, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்க கூடாது. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகூட்டத்தை நடத்தி ஆலோசனையைப் பெற வேண்டும் என்றனர்.

More Stories
தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்
“அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை” – லீமா ரோஸ் விளக்கம்