June 1, 2026

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 °C டிகிரி வெயில்… இன்று வானிலை எப்படி இருக்கும்? IMD அப்டேட் இதோ

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்த நிலையில், நாளை முதல் வெயில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் காலம் முடிந்த பிறகும்,பல இடங்களில் கடும் வெப்பம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

  • அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
  • திருச்சிராப்பள்ளி AP – 40.3°C, இயல்பை விட 2.4°C அதிகம்.
  • மதுரை நகரம் – 39.4°C, இயல்பை விட 2.2°C அதிகம்.
  • சென்னை நுங்கம்பாக்கம் – 39.0°C, இயல்பை விட 1.1°C அதிகம்.
  • கோயம்புத்தூர் AP – 35.6°C, 1.8°C அதிகரிப்பு.
  • ஊட்டி – 24.7°C, இயல்பை விட 1.1°C அதிகம்.
  • தஞ்சை -100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
  • நாமக்கல்–100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
  • காரைக்கால்–100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
  • ஈரோடு -100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
  • நாகை –100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
  • பாளையங்கோட்டை–100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
  • ஆகிய இடங்களிலும் தலா 100 டிகிரி வெப்பம் தகித்தது.
  • வால்பாறை – 28.0°C, இயல்பை விட 2.4°C அதிகம்.
  • பாம்பன் – 33.1°C, 0.9°C குறைவு.
  • கடலூர் – 37.4°C, சிறிய அளவு குறைவு (-0.2°C).

தமிழ்நாட்டின் அதிக வெப்பநிலைக்கு காரணம்?

பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த பருவமழை தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தில் வளிமண்டலத்தில் பெரிய அளவில் காற்று மாறுபாடுகள் ஏற்படும்.பருவமழை மேகங்கள் முழுமையாகத் திரண்டு கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளுக்குள் நுழையும் வரை, சூரியக் கதிர்கள் நேரடியாக நிலப்பரப்பில் பதியும்.இதனால் மழைக்காலத்திற்கு முந்தைய இந்த இடைப்பட்ட நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  

நாளை முதல் வெப்பநிலை படிப்படியாக குறையும்

இதனிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முன்னதாக இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் மேல்மட்ட வளிமண்டல சுழற்சி நிலவுவதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

16 மாவட்டங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு

இந்த நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை அடுத்த 3 முதல் 4 நாட்களில் கேரளாவில் தொடங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Spread the love