“தப்பா சித்தரிக்காதீங்க.. நடந்தது இதுதான்” கல் குவாரி சோதனையின் போது தான் பேசியது சர்ச்சையான நிலையில் போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார்.
போளூர் எம்.எல்.ஏ அபிஷேக்
போளூர் எம்.எல்.ஏ அபிஷேக்(புகைப்படங்கள்- Samayam Tamil)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றார். இவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ப்பின் போது முதல்வர் விஜய், தவறு செய்தாலோ, தவறு செய்யும் எண்ணம் இருந்தாலோ அவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவர் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். மேலும் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் சர்ச்சை பேச்சு
மேலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் தமிழகத்தில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகிறது.மறுபுறம் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் செயல்பாடுகளில் பேசுப் பொருளாகி வருகிறது.அந்த வகையில் மீண்டும் போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் பேச்சு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த நபர் கடித்தத்தை படிக்காமல் நின்றுக் கொண்டிருந்தார்.அப்போது தவெக எம்.எல்.ஏ அபிஷேக்,இந்த நக்கல் எல்லாம் இங்க வேண்டாம்.. அதிகாரிங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சிகோங்க.. பணிவா பேசுனா தான் வேலை நடக்கும்.நீ சாதாரணமா நிக்க மாட்டீயா? தம்பி உன்னுடைய வயதை தாண்டி தான் நான் இங்கு வந்து இருக்கேன்.
“நான் யாரிடமும் உன்னை கெஞ்சச் சொல்லவில்லை. இந்த மாதிரி நக்கலாக நடந்து கொள்வது சரியல்ல. உங்க அப்பா எப்படி மரியாதையாக நடந்துகொள்கிறார் என்பதை பாருங்கள். அவரிடம் நான் எப்போதாவது தரக்குறைவாக பேசியிருக்கிறேனா? இதுபோன்ற விஷயங்களை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா?” என்று அவர் பேசியதாக கூறப்படும் வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தப்பா சித்தரிக்காதீங்க.. நடந்தது இதுதான்
இந்த சம்பவத்திற்கு போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார். அதில், தப்பா சித்தரிக்கப்பட்டு இருக்கு. தவறான வீடியோ பரபரப்பட்டு இருக்கிறது.அவர்கள் ஊழியர்கள் கிடையாது. தொழிலாளர்கள் இடமோ அல்லது ஊழியர்களிடமோ தவறாக பேசும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அவ மரியாதை செய்யவோ எங்களுக்கு எண்ணம் கிடையாது நாங்கள் பேசியது கல்குவாரி நடத்துபவர்களிடம். மகளிர் சுய உதவி குழு காண்டாக்ட் எடுத்து இருக்கிறார்கள் கல்குவாரியை நடத்துவதற்கு. அந்த காண்ட்ராக்ட் படி அவர்கள் கைகளில் தான் உடைக்க வேண்டும் ஆனால் இவர்கள் அனைவரும் இயந்திரத்தை பயன்படுத்தி கல்குவாரிகளை எடுத்து வருகிறார்கள்.
அதற்கான புகார் மனுக்கள் தான் என்னிடம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னாடி கூட கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடியின் மூலம் கல் ஒன்று சிதறி காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களிடம் முறையான ஆவணங்கள் குறித்து கேட்டோம். நாங்கள் எங்களுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்யவில்லை. தனியாக சென்று ஆய்வு நடத்தவில்லை நாங்கள் சென்றது அரசு அதிகாரிகளுடன் தான் அதற்கான அனைத்து ஆதார வீடியோக்களும் தங்களிடம் உள்ளது.அந்த இளைஞர் நீ யாரு இதை கேட்பதற்கு என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் இதற்காகத்தான் நான் பேச ஆரம்பித்தேன் என்று கூறினார்.

More Stories
முதல்வர் விஜய் வருகைக்காக திருச்சியில் போக்குவரத்து மாற்றம்: பொதுமக்கள் அவதி
கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை: இபிஎஸ் நேரில் அஞ்சலி
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கலை சேர்ந்த டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.