கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் வரும் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் நாற்காலிக்கு மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
கர்நாடகா புதிய முதல்வராகும் டி.கே. சிவகுமார்
தேசிய காங்கிரஸ் டெல்லித் தலைமைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்ததிற்கு பிறகு,கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்பேரில் கடந்த 28-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெற்றது.
தவெக அமைச்சரவை விரிவாக்கம்! யார் யாருக்கு வாய்ப்பு?
இந்த கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார், பரமேஷ்வர், பிரியங்க் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக டி.கே.சிவகுமாரின் பெயரை சித்தராமையா முன்மொழிந்தார். அதனை மூத்த தலைவர் பரமேஷ்வர் ஆதரித்து வழிமொழிந்தார்.
டி.கே.சிவகுமாரின் பெயரை முன்மொழிந்த சித்தராமையா
இதையடுத்து, டி.கே.சிவகுமார் காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு சித்தராமையா, பரமேஷ்வர், முனியப்பா, பிரியங்க் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் டி.கே.சிவகுமார் ஒருமனதாக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா ராகுல் பங்கேற்பு
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி.கே.சிவகுமார் ஜோதிட நம்பிக்கை கொண்டவர் என்பதால், பதவியேற்பு விழாவுக்கான தேதி மற்றும் நேரம் அவரது நெருங்கிய ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் நடத்த கட்சி தலைமையகம் முடிவு செய்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் பெருமளவில் தொண்டர்கள் மற்றும் கட்சியினரை பெங்களூருவுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என காங்கிரஸ் செயல் தலைவர் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டி.கே. சிவகுமாருக்கு காத்திருக்கும் சவால்கள்
- சித்தராமையா ஆட்சியில்பெண்களுக்கு மாதம் 2000ரூ உதவித் தொகை
- அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
- ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி
- 200 யூனிட் மின்சாரம் இலவசம்
- வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3ஆயிரம் போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன. இந்த திட்டத்திற்காக கர்நாடகா அரசு சுமார் 52 ஆயிரம் கோடி செலவிடுகிறது.இதனை சித்தராமையா சிறப்பாக செயலாற்றி வந்தார். மேலும் நிதிதுறையில் கை தேர்தவர் என்பதால் சிறப்பாக செய்ய முடிந்தது.
- ஆனால் இதுடி.கே. சிவகுமாருக்கு காத்திருக்கும் சவால்கள் உள்ளது.

More Stories
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.42 உயர்வு: ஜெட் எரிபொருள் விலை 27% குறைப்பு
உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தின் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 °C டிகிரி வெயில்… இன்று வானிலை எப்படி இருக்கும்? IMD அப்டேட் இதோ