September 22, 2026

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..முதல் நாளிலேயே நலத்திட்டப் பொருட்கள் விநியோகம் – அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்க உள்ளனர்.

  

இன்று முதல் பள்ளிகள் திறப்பு

 இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1.15 கோடி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த கல்வியாண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் நிலவியதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதி சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது.

வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவர்கள்

வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவர்கள்

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய வகுப்புகள், புதிய ஆசிரியர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திக்க மாணவர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், பள்ளி வளாகங்கள் மீண்டும் கலகலப்புடன் காணப்படவுள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பள்ளி வளாகங்களில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

முதல் நாளிலேயே நலத்திட்டப் பொருட்கள் விநியோகம்

 முதல் நாளிலேயே நலத்திட்டப் பொருட்கள் விநியோகம்

குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சார இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு தேவையான சீரமைப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான சூழலிலும் கல்வி கற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், புதிய கல்வியாண்டின் முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு

 மாணவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு

இதனிடையே, சென்னையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் வரவேற்க உள்ளார். மாணவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்து புதிய கல்வியாண்டை சிறப்பாக தொடங்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்புஒரு மாதத்திற்கும் மேலான விடுமுறைக்குப் பிறகு பள்ளி மணி மீண்டும் ஒலிக்க உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் புதிய கல்வியாண்டுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Spread the love