புதுடெல்லி: “அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது.
இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் பேசினார். அப்போது அண்ணாமலை கூறியதாவது: நான் 2020, ஆகஸ்ட் 25-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
என்னுடைய பாதை வேறு; வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும்; எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன; நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்; ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன். இது தமிழர் பண்பு என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்.
ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில்தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும்; எல்லோரும் சேர்ந்து, இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை.
எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. ஏனெனில், நாம் ஒதுங்கிக் கொள்வோம்; வர மாட்டோம்.
என்னுடைய பாதையும்கூட 2009ல் விஜயகாந்த்தின் தேமுதிகவில் மூன்று மாத காலம் இருந்து பயிற்சி பெற்று, பின்னர் 10 ஆண்டு காலம் கழித்து பாஜகவில் இணைந்து அங்கு 6 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில், தற்போது தனித்துவமான முறையில் நம்முடைய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.” இவ்வாறு அண்ணாமலை அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
. நான் காவல்துறை பதவியை விட்டு விலகிய பிறகு எனக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது, தமிழ்நாட்டுக்கு எது நல்லது; ரஜினிகாந்த்துக்கு எது நல்லது; அண்ணாமலைக்கு எது நல்லது என்ற மூன்று விஷயங்கள்தான் என் கண் முன்பாக இருந்தன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால், கோவிட் பெருந்தொற்று காலமாக இருந்ததால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது. நான் பாஜகவில் இணைவதாக பி.எல். சந்தோஷ் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால் அதை மீறக்கூடாது என நான் கருதினேன்.
இதனால், என்னை மன்னித்துவிடுங்கள்; என்னால் வர முடியாது என்று ரஜினிகாந்த்திடம் கூறிவிட்டு, மறுநாள் பாஜகவில் இணைந்தேன். பிறகு நேரிலும் சந்தித்து மன்னிப்பு கோரினேன். அவரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு தனது முடிவை அவர் எடுத்தார். சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். வேறு காரணம் இல்லை.
பாஜகவில் நான் இருந்தபோது பல தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அப்போது முடிவெடுத்தோம். அதேபோல், மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்து அவ்வாறே போட்டியிட்டோம். எனக்கும் இன்னொரு கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்சினை அல்ல அது. பாஜக தமிழர் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம்

More Stories
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ
தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே போதும்” – பிரேமலதா
முதல்வர் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு