சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் புதிய சீருடை அறிமுகம் இன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் கடந்த மாதம் 10ஆம் தேதி பதவி ஏற்ற பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டம் முதலில் கடந்த 29ஆம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த தொடக்க விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அப்போது முன்று முக்கிய கோப்புகளில் விஜய் மக்கள் முன்னிலையில் மேடையிலேயே கையெழுத்திட்டார். பெண்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க கையெழுத்திட்டார்.
திட்டத்தை மீண்டும் தொடங்க முதலமைச்சர் விஜய் திட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டம் முதலில் கடந்த 29ஆம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த தொடக்க விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.இப்போது அந்த “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை மீண்டும் தொடங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
இதற்கான ஏற்பாடுகள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட உள்ளது.இதன் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்பு குழுவில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பிற பதவிகளில் இருந்து 20 காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்களுக்கு புதிய சீருடை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்களுக்கு புதிய சீருடையை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அடர் நீல நிற சட்டை, காக்கி பேன்ட், கருப்பு நிற தொப்பி, பேட்ஜ் ஆகியவை அடங்கிய சிறப்பு சீருடை அறிமுகம்.சட்டையில் சிங்கப்பெண் லோகோ பேட்ஜ், கருப்பு நிற பெல்ட், எடை குறைவான கருப்பு ஷூ ஆகியவை வழங்கப்படும்.
அதிரடிப்படை போலீஸார் தேர்வு
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸார் தேர்வு செய்யப்படவுள்ளனர்.தமிழ்நாட்டின் 250 காவல் துறை உள்கோட்டங்களிலும் சிங்கப்பெண் காட்டங்களிலும் சிறப்பு அதிரடிப்படை ஏற்படுத்தப்படுகிறது.

More Stories
விஜய்க்கும் , அவருக்கும் ஒரே ராசி.. 2026க்கு பிறகு அரசியலில் பெரிய மாற்றம்?அண்ணாமலை ஜாதக ரகசியம் வெளியிட்ட ஜோதிடர்
முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்? – செங்கோட்டையன் விளக்கம்
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: மத்திய, மாநில அரசு தீர்வு காண ராமதாஸ் கோரிக்கை