February 7, 2026

தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘கொரியத் தமிழ்ச் சங்கம்’

அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளைப் படித்துவிட்டு, அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசிக்கும் தமிழக மாணவர்கள், தென்கொரியாவில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிக்கலாம். இதற்காக மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வழிகாட்டுகிறது கொரியத் தமிழ்ச் சங்கம்.

கொரியாவில் உயர்கல்வி: தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள் தென் கொரியாவில் உள்ள தேசியப் பல்கலைக்கழகங்களிலும் உலகத் தரம் வாய்ந்த ஆய்வகங் களிலும் பயிற்சி பெறுவதற்கும் உதவிவருகிறது கொரியத் தமிழ்ச் சங்கம்.

இது குறித்து விரிவாகப் பேசினார் கொரியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரவிந்தராஜா செல்வராஜ். “தென் கொரியாவில் ஆராய்ச்சி, பொறியியல், தொழில்நுட்பப் பணிகள் எனப் பல்வேறு பணி களுக்காகத் தமிழர்கள் வருகிறார்கள்.

உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நடைமுறைகளையும் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான வாய்ப்புகளையும் விளக்கி உதவுகிறோம்.

உயர்கல்வியைத் தாண்டி தமிழ்மொழி ஆய்வு, கொரியா – இந்தியப் பண்பாடு குறித்த ஆய்வுகள், பாரம்பரிய தமிழ்க் கலைகளை கொரிய மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்துவரு கிறோம். கொரியாவில் தமிழர்கள் ஏதேனும் இன்னலுக்கு ஆளானால் அவர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய் கிறோம்.

மொழிபெயர்ப்புப் பணிகள்: கொரிய மொழியில் புலமை பெற்ற கொரியத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுத லோடு தந்தை பெரியாரின் படைப்புகள், ஜெயகாந்த னின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, பூமணியின் ‘வெக்கை’ போன்ற நவீன இலக்கியங்களைக் கொரிய மொழியில் மொழிபெயர்த் துள்ளனர்.

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (CICT) வழிகாட்டுதல் நிதியுதவியுடன் 2020இல் திருக்குறள், மணிமேகலை போன்ற செவ்வியல் இலக்கியங்களை பீட்டர் சகாயம் கொரிய மொழிக்கு மொழிபெயர்த்தார்.

கொரிய மொழியில் ஐந்தாயிரத் துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள்இன்றும் புழக்கத்தில் உள்ளன. தமிழ்நாட்டுக்கும் தென்கொரியா வுக்கும் இடையே நிலவிவரும் ஆழ மான வணிகத் தொடர்பு, இத்தமிழ்ச் சொற்கள் எவ்வாறு கொரியாவிற்குச் சென்றடைந்திருக்கும் என்பது குறித்த விரிவான ஆய்வுப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார்.

தமிழ் ஆராய்ச்சிக் கழகம்: 2023ஆம் ஆண்டில் ‘கொரியத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்’ தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுதல், அறிவுசார் விவாதங்களை முன்னெடுத்தல், கொரிய மக்களிடையே தமிழ்ப் பண்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.

“கொரியாவில் நடக்கும் முக்கியக் கலாச்சார விழாக்களில் நடத்தப்படும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனத் தமிழ்க் கலைகளைக் கவனிக் கும் கொரிய மக்கள் தமிழ்க் கலாச்சாரத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுக் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற வற்றைக் கற்றுக்கொள்ள முன்வரு கின்றனர்” என்கிறார் அரவிந்த ராஜா செல்வராஜ்.

தென்கொரியாவில் உயர்கல்வி பெற விரும்புவோர், www.koreatamilsangam.com என்கிற இணைய தளத்தையோ koreatamilsangamkts@gmail.com மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

– கட்டுரையாளர், ஞா. சக்திவேல் முருகன், உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்விப் பிரிவு.

Spread the love