மலையாள நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ நடித்துள்ள புதிய படம் குறித்து…

சத்தா பச்சா பட போஸ்டர். படம்: இன்ஸ்டா / சத்தா பசா தி ஃபிலிம்
மலையாள நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ நடித்த சத்தா பச்சா எனும் மலையாள திரைப்படம் இன்றுமுதல் (பிப்.6) தமிழில் மொழியிலும் திரையிடப்படுகிறது.
இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த ஜன.22ஆம் தேதி வெளியான இந்த மலையாள திரைப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் மம்மூட்டி வழங்க நடிகர் மோகன்லால் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ள நிலையில் சென்னை திரையரங்குகளில் தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது.

More Stories
“100ஆவது படம் எடுக்க வேண்டும் என்ற அவரின் கனவு..” – கலங்கி பேசிய விக்ரமன் | R B Choudary | Vikraman
இன்று அஜித், ஷாலினியின் 26வது திருமணநாள்: எப்பவும் இப்படியே சந்தோஷமா இருங்க