அமெரிக்கா -ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் . இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அமெரிக்கா – ஈரான் போர்
இதற்கிடையேஅமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது. உலகளாவிய எரிசக்தி சந்தையில் இதன் தாக்கம் பெரிய அளவில் உணரப்பட்டது.
மோதலை நிறுத்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.
DMK இதுனால தான் தோத்துச்சு! இத மாத்துவாங்களா?
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் இறுதி நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானுடனான போர் முடிவு ஒப்பந்தம்
இது குறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ஈரானுக்கு எதிரான இராணுவ தாக்குதல்களை ரத்து செய்திருந்தார். அதோடு ஈரானின் எண்ணெய் தொழில்துறையை கைப்பற்றுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொள்ளலாம் என்றும், இது இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் நடைபெறலாம் என்றும் டிரம்ப் கூறினார். “நாங்கள் ஈரானுடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளோம். ஆவணங்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இது மிக விரைவில் முடிவடையும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க அதிபர் கூறுகையில் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ வாங்கவோ கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறினார். இந்த ஒப்பந்தம் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெற முடியாததை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இதையே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்ப் கொடுத்த அப்பேட்
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார். இதனால் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இராணுவ பதற்றமும் கடல் போக்குவரத்து தடைகளும் குறைந்து, உலக எரிசக்தி சந்தையில் ஏற்பட்ட அழுத்தம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு எப்படி சம்மதித்தது என்ற கேள்விக்கு, அவர்கள் கடுமையான சேதங்களை சந்தித்ததால் சம்மதித்தனர் என்று டிரம்ப் பதிலளித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஈரானின் உயர்மட்ட தலைமை ஆதரவு அளித்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். ஈரான் உச்ச தலைவர் முஜ்தபா கமேனெய் இதற்கு ஒப்புக்கொண்டாரா என்ற கேள்விக்கு, “ஆம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் தனது வளைகுடா நாடுகளிலுள்ள கூட்டாளிகளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் உட்பட பிராந்திய தலைவர்களுடன் பேசியதாகவும், மத்திய கிழக்கு முழுவதும் இந்த ஒப்பந்தத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.
முந்தைய பேச்சுவார்த்தைகளை விட தற்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். ஈரான் இப்போது ஒப்பந்தம் செய்ய அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும், அவர்கள் கடுமையான தாக்குதல்களை சந்தித்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

More Stories
“ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்..” ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.. பரபரப்பில் மத்திய கிழக்கு!
அமெரிக்க ராணுவ தலைமையகம் அவசர அவசரமாக மூடல்: ஊழியர்கள் வெளியேற்றம்
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு