இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர தரைத் தாக்குதல் கிரூஸ் ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாகப் பறக்கவிட்டுச் சோதனை நடத்தப்பட்டது.
உலகின் மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வருகிறது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஏவுகணை சோதனை மற்றும் அணுயுத எண்ணிக்கை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவும் நாட்டின் பாதுக்காப்பை மேம்படுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.
இத்தகைய சூழலில் இந்தியா தனது பாதுகாப்புத் திறனில் மேலும் ஒரு முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் திங்கட்கிழமை நீண்ட தூர நில இலக்கு தாக்கும் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்தது.
குரூஸ் ஏவுகணை
- கிரூஸ் ஏவுகணையால் தாழ்வான உயரத்தில் பறந்து, வழிகாட்டப்பட்ட பாதையில் தனது இலக்கை அடைய முடியும்.
- LRLACM (Long Range Land Attack Cruise Missile) ஏவுகணையானது 1,000 முதல் 1,500 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டது
- இது முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
- நிர்பய் திட்டத்தின் கீழ் முதிர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
- இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்காக நீண்ட தூரம் சென்று துல்லியமாகத் தாக்கும் ஆயுதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஒடிசா கடற்கரையிலுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இது நாட்டின் நீண்ட தூர துல்லிய தாக்குதல் திறனை வலுப்படுத்தும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் கூடும் TVK செல்வாக்கு…குவியும் மாற்று கட்சியினர்!
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் சோதனை
அதிகாரிகளின் தகவல்படி, இந்த ஏவுகணையின் அனைத்து திட்டமிடப்பட்ட இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. பல்வேறு கண்காணிப்பு மற்றும் தரவுச் சேகரிப்பு அமைப்புகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் இந்த சோதனை முழுமையாக வெற்றியடைந்ததை உறுதிப்படுத்தின.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஏவுகணை தனது அனைத்து இலக்குகளையும் அடைந்து, முக்கிய தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நீண்ட தூர துல்லிய தாக்குதல் திறனை இது மேலும் வலுப்படுத்துகிறது. DRDO மற்றும் இந்திய தொழில்துறை இணைந்து உருவாக்கிய இந்த திட்டம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ நோக்கத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
சந்திரபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையம் (ITR) மூலம் பல்வேறு கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டு ஏவுகணையின் செயல்திறன் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. சோதனையின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் அதன் செயல்பாட்டு திறனை உறுதிப்படுத்தின.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வெற்றிகரமான சோதனைக்காக DRDO குழுவையும் தொழில்துறை கூட்டாளிகளையும் பாராட்டினார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் DRDO தலைவர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை நேரில் கண்காணித்தனர்.
அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைப்பு
இந்த எல்.ஆர்.ஏ.சி.எம் ஏவுகணை முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். பெங்களூருவில் உள்ள Aeronautical Development Establishment (ADE) இந்த திட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை பிரதிநிதிகளும் இந்த சோதனையை நேரில் பார்த்தனர்.
இந்த திட்டம் நிர்பய் மற்றும் எல்.ஆர்.ஏ.சி.எம் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவின் தன்னிறைவு பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏவுகணை சுமார் 1,500 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. மேலும், இலக்கை தேடி காத்திருந்து சரியான நேரத்தில் துல்லியமாக தாக்கும் திறனும் இதற்கு உள்ளது. இது பாரம்பரிய வெடிகுண்டுகளையும் அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

More Stories
இந்தியர் உட்பட 25 மாலுமிகள் கைது | ரஷ்யக் கப்பலை கைப்பற்றிய பிரிட்டிஷ் ராணுவம்!
டெல்லியைத் தாக்கிய புழுதிப் புயல் மணிக்கு 92 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று
தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்