August 12, 2026

PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

2026-06-26

நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலருக்கும் பிபிஎஃப் (PPF) கணக்கு இருப்பது வழக்கம். அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி. தனது இணையதளத்தில் சில முக்கிய சேவைகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்போவதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.

மென்பொருள் மற்றும் தரவுத்தளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காகவே இந்தத் தற்காலிகச் சேவை முடக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தகவல்களின்படி, ஜூன் 26 நள்ளிரவு முதல் ஜூன் 28 இரவு 11:59 மணி வரை, பிஎஃப் கோரிக்கைகள் (claims) தொடர்பான சேவைகள் இபிஎஃப்ஓ இணையதளத்தில் கிடைக்காது. ஜூன் 29 முதல் அனைத்து சேவைகளும் வழக்கம்போலவும், இன்னும் வேகமாகவும் செயல்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love