ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழா…
100 பம்பைகள் முழங்க மயான கொள்ளை நிகழ்ச்சி…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி தீமிதி விழா நடந்தது.
பிரசித்திப் பெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், நடராஜர் உற்சவ மூர்த்திகள் அழைப்பு நடந்தது.
இதனைத் தொடர்ந்து அங்காளம்மன் சாமியை அலங்கரித்து பழைய பஸ் நிலையம் வழியாக சிங்க வாகனத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து முத்துக்காளிபட்டி மயானத்தில் பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டுவந்திருந்த ஆடு, கோழிகளை விரதம் இருந்து வந்திருந்த ஆடு கடிக்கும் பூசாரிகள் ஆக்ரோஷத்துடன் கடித்து மயானக்கொள்ளை நடத்தினர்.
25க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை உயிருடன் கடித்து மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு காவு கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ராசிபுரம், புதுப்பாளையம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், கட்டனசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்