No Aadhaar Card for Adults: அசாம் மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்காக 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட யாருக்கும் புதிய ஆதார் கார்டுகள் கிடைக்காது என்று அரசு அறிவித்துள்ளது. இது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் இனி 18 வயதிற்கு மேற்பட்டோர் யாருக்கும் புதிதாக ஆதார் கார்டுகள் வழங்கப்படாது என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. அதேசமயம், புதிதாக ஆதார் கார்டுகள் பெறுவதற்கும் புதிய கட்டுபாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துணிச்சலான முடிவுக்கு பின்னணி இருக்கும் அதிர்ச்சிக் காரணம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கட்டாய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு
இந்திய தனி அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் கார்டு என்பது முக்கியமான பயோமெட்ரிக் அடையாள ஆவணமாகும். இந்தியாவில் ஆதார் கார்டு முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு தான் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு முக்கிய மற்றும் கட்டாய அடையாள ஆவணமாக மாற்றப்பட்டது. இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து நடைமுறைகளுக்கும் ஆதார் கார்டு இருந்தால் போதுமானது. இந்தியா முழுவதுமே இந்த ஆதார் கார்டு செல்லுபடியாகும்.
அசாம் மாநில அரசின் அதிரடி அறிவிப்பு
இப்படியான சூழ்நிலையில் வடகிழக்கு மாநிலமான அசாமில் இனி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக ஆதார் கார்டுகள் வழங்கப்படமாட்டாது என்று மாநில அதிரடியாக அறிவித்து இருக்கிறது. மேலும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டுகள் பெற புதிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், சில பிரிவினருக்கு இந்த அறிவிப்பில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த முடிவு? அதிர்ச்சி பின்னணி
இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் ஒரு அதிர்ச்சிக் காரணமும் இருக்கிறது. அதாவது, அசாமில் உள்ள பார்பேட்டா, துப்ரி, மொரிகாவ், நாகோன் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை அந்த மாவட்டத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையை விடவும் அதிகமாக இருக்கிறது. இது எப்படி சாத்தியாகும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. எனவே, கூடுதல் ஆதார் அட்டைகளை பெற்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன் முறையாக விண்ணப்பித்தால் ஆதார் அட்டை வழங்கப்படாது என்ற முடிவுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
சட்டவிரோத ஊடுருவல் அதிகரிப்பு
அசாமில் மட்டும் சட்டவிரோத ஊடுருவல் அதிகரிக்க காரணம் இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்திற்கு அருகிலேயே இருப்பது தான். அங்கிருந்து சட்டவிரோதமாக மாநிலத்திற்கு நுழைவோர், ஆதார் அட்டையை எளிதாக பெற்றுவிடுகின்றனர். இதனால், பல்வேறு சிக்கல்களை சந்தித்த மாநில அரசு நேஷனல் ரிஜிஸ்டர் ஆஃப் சிட்டிஷன் எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டில் பெயர் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. எனினும், சட்டவிரோத ஊடுருவலையும், ஆதார் பெறுவதையும் தடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறது.
சில பிரிவினருக்கும் மட்டும் விலக்கு
தற்போது, இந்த அறிவிப்பும் மூலமாக ஓரளவு சட்டவிரோத ஊடுருவலை தடுக்க முடியும் மாநில அரசின் நம்பிக்கையாக இருக்கிறது. அதேசமயம், இந்த தடையில் இருந்து சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் இருக்கும் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர் 2027 மாதம் வரை புதிய ஆதார் கார்டு பெற விண்ணப்பித்து, வழக்கம்போல ஆதார் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
- பழங்குடியினர்
- பட்டியல் சாதியினர்
- தேயிலைத் தோட்ட சமூகத்தினர்
- மாற்றுத் திறனாளிகள்
புதிய ஆதார் கார்டு பெற கடுமையான கட்டுபாடு
ஒருவேளை மிக முக்கியமான அல்லது விதிவிலாக்கான சமயங்களில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்குப் பரிந்துரை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழக்கம் போல ஆதார் கார்டு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஏப்ரல் மாதத்தில் இருந்து முழுமையான தடை
வருகின்ற 2027 ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட யாருக்கும் ஆதார் கார்டு வழங்கப்படுவது முழுவதுமாக நிறுத்தப்படும். இந்த தடையானது பழங்குடியினர், பட்டியல் சாதியினர், தேயிலைத் தோட்ட சமூகத்தினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் பொருந்தும். இப்போது இருக்கும் பல ஆவணங்களை பெறுவதிலும் இருக்கும் சிரமம் ஆதார் அட்டை வாங்குவதில் இருப்பதில்லை. இப்படியான சூழ்நிலையில் அசாம் அரசின் இந்த அதிரடியான அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More Stories
“தகுதியுடைய வாக்காளர்களின் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்க” – தேர்தல் ஆணையத்துக்கு ஒவைசி வேண்டுகோள்
உணவுப் பாக்கெட்டுகளில் ஊசி பயன்படுத்தக் கூடாது: உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
இந்திய மாலுமிகளின் கப்பல்களில் தொடர்ந்து தாக்குதல்: அமெரிக்க தூதரை 2-வது முறை அழைத்து வெளியுறவுத் துறை கண்டனம்