March 25, 2026

அதிமுக சவாலாக இருக்கும் தொகுதிகளை கொடுத்துவிட்டது – சமூக வலைத்தளங்களில் குமுறும் தமாகா!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு 5 தொகுதிகள் நிலையில் தமகா வினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுக பாஜக இடையே கடந்த சில தினங்களாக பலகட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் தான் தமிழ் மாநிலக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கி உள்ளதாகும் இதனால் கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக கட்சிக்கு இந்த 2026 சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாகும். இந்த தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை பெற்று தங்களின் செல்வாக்கை என்.டி.ஏ கூட்டணி நிலைநிறுத்தியாக வேண்டும். அதற்காகதான் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன.

  

அதிருப்தியில் தமிழ் மாநில காங்கிரஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் கட்சியின் சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஐந்து தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது இந்த ஐந்து தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சவாலாக இருக்கும் தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளும் கட்சிக்கு மிகவும் சவாலாக இருக்கக்கூடிய தொகுதிகளாக கருதப்படுகிறது. மேலும் வேண்டுமென்றே சவால் நிறைந்த தொகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

குறிப்பாக ஈரோடு மேற்கு தொகுதி அமைச்சர் முத்துசாமியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட இருக்கிறது தாமகா. இது மிகவும் கடினமான ஒரு தேர்வாக கவனிக்கப்படுகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் தனக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜ் தொடர்ந்து வேலை செய்தார் ஆனால் அவருக்கு ஈரோடு மேற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியினரிடையே அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தொகுதி அமைச்சர் சக்கரபாணி தொடர்ச்சியாக வெற்றி பெறும் தொகுதி என்று தெரிந்தே தங்களுக்கு அந்த தொகுதியை ஒதுக்கி இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.மேலும் அதேபோல தொடர்ந்து ஒன்பது முறையாக கும்பகோணம் பகுதியில் திமுக வென்று வரும் நிலையில் அந்த தொகுதியையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கி இருப்பதாக தொண்டர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றன.

தாமரை சின்னத்தால் அதிருப்தி

மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் வலிமையாக இருக்கும் என்று தாமக தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிட சொல்லி இருப்பது அந்த கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்த செய்து இருக்கிறது.

ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் கூடுதல் தொகுதிகளை கேட்டிருந்தார். எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக அதிமுக கூட்டணிகள் இணையாமல் திமுக வசம் சென்றுவிட்டதால் பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் சமூக வலைதளங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Spread the love