April 25, 2026

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இழந்த ஐசிசி கோப்பைகள் குறித்து…

News image

ஆட்டமிழந்து வெளியேறிய டேவிட் மில்லர்.– படம்: ஏபி

தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது 12ஆவது முறையாக ஐசிசி உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லாமல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணி ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. ஆனால், அந்த அணியில் டேவிட் மில்லர் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.

டேவிட் மில்லர் (36 வயது) கடந்த 2010-ல் தென்னாப்பிரிக்க ஒருநாள், டி20 அணியில் அறிமுகமாகினார். தற்போது வரை, அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கிறார்.

சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தினார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் ஹார்திக் வீசிய பந்தில் சூர்யகுமார் எல்லைக் கோட்டில் மிகவும் நம்பமுடியாத ஒரு ஃபீல்டிங்கினால் ஆட்டமிழப்பார்.

ஒவ்வொரு முறையும் டேவிட் மில்லர் தோல்வியினால் வெளியேறும்போது தென்னாப்பிரிக்க அணி மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களுமே வருத்தத்தில் மூழ்குகிறார்கள். அதே அளவுக்கு, மில்லருக்கு அந்தளவுக்கு அதிர்ஷ்டமில்லை எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.Advertise with us

டேவிட் மில்லர் இழந்த ஐசிசி கோப்பைகள் விவரங்கள்

2013 – சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தோல்வி

2014 – டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி

2015 – ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி

2016 – டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் தோல்வி

2017 – சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றில் தோல்வி

2019 – ஒருநாள் உலகக் கோப்பை குரூப் சுற்றில் தோல்வி

2021 – டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தோல்வி

2022 – டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தோல்வி

2023 – ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி

2024 – டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி

2026 – டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி

Spread the love