சென்னை: பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2022-23-ம் ஆண்டில் மாவட்டங்கள் ஏ, பி, சி என 3 வகையாகப் பிரிக்கப்பட்டன.
ஏ பிரிவுக்கு ரூ.17.50 லட்சம், பி பிரிவுக்கு ரூ.14 லட்சம், சி பிரிவுக்கு ரூ.12 லட்சம் வீதம் வீதம் மொத்தம் ரூ.4.96 கோடியில் புத்தகக் கண் காட்சிகள் நடத்தப்பட்டன.
2023-24 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் (2026-27) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்காக, மொத்தம் ரூ.8.45 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பொது நூலக இயக்குநர் இந்த நிதியை மாவட்டக் கருவூலங்கள் மூலம் முன்பணமாகப் பெற்று, புத்தகக் கண்காட்சிகளை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி அணை பகுதியில் ரூ.9 கோடியில் வளர்ச்சி பணிகள்
ஆயுத பூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு – பயணிகள் கடும் அதிர்ச்சி!