தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் மூன்று தினங்களில் எண்ணப்பட இருக்கின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிய மனுவில் நீதிமனறம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ரிசல்ட்டுக்காக பலரும் காத்திருப்பில் உள்ளனர். இதனையடுத்து வரும் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு
அதாவது, சென்னை ஐகோர்ட்டில் லட்சுமணன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆறு கிராமங்களை சார்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.
மனு தள்ளுபடி
இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் எவ்வாறு வாக்களிக்க மூடியும் என்று விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூர் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்பாலக்குறிச்சி, ரெகுநாதபட்டி, சீகம்பட்டி, விடத்தலான்பட்டி உட்பட ஆறு கிராமங்கள் திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.
தேர்தலை புறக்கணித்த மக்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2012 பேர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்த தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் அவர்களுக்காக மூன்று வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்த வேண்டுமென மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை தற்போது சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
எக்ஸிட் போல் ரிசல்ட்களை நம்பலாமா, வேண்டாமா? பாஜக தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
வாக்களித்தவர்களின் விவரங்கள் அடங்கிய படிவம் ஆய்வு
கடந்த 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களின் விவரங்கள் அடங்கிய 17ஏ படிவத்தை ஆய்வு செய்ததாக தெரிவித்தது. 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்த 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில் எதிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை.
எக்ஸிட் போல் ரிசல்ட்கள் வெளியீடு
இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் திமுக, அதிமுக, தவெக இடையில் மும்முனை போட்டிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான எக்ஸிட் போல் ரிசல்ட்கள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளது.
திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு
திமுக கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 20 முதல் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என அதிகமான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக இரண்டு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
4 பேர் உயிரிழந்த நிலையில் நவி மும்பையில் தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி
விஜய் – சங்கீதா வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையைத் தொடரப்போகும் புதிய நீதிபதி யார்?
சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணத்தை வழங்கியது வங்கி நிர்வாகம்