“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி…

அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.
“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” என அவரது நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57 வது நினைவு நாளான இன்று (பிப். 3) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுகவினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவரது உருவச்சிலை, புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அண்ணாவின் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணாவின் புகழை நினைவுகூரும் விதமாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியுள்ளார்.
அந்தப் பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான்! ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்