ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு பற்றி…

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 7) சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்துப் போரும் இருந்து வந்தது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் அதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.Advertise with us
தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்று முதல்வர் உள்பட திமுகவினர் கூறிவந்த நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி மேற்குவங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.
தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்