புதுடெல்லி: இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘சி-295’ ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்கு பின்னணியில் இருந்த ஒட்டுமொத்தக் குழுவுக்கும் இந்திய விமானப்படை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

More Stories
“ஒன்றுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது மட்டுமே இந்த அரசு பணியும்” – ராகுல் காந்தி
எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் – முக்கிய அம்சம் என்ன?
தேசிய உயிரி எரிவாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்