March 24, 2026

இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி

இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சிட்கோ வசந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார் அதில் கூறி இருப்பது என்னவென்றால் கடந்த 30 ஆண்டுகளாக முதலிபாளையத்தில் வசித்து வருகிறேன் எங்களது முதலிபாளையம் ஊராட்சி பகுதியில் சர்வே எண் 84/1 84/2,84/3 இதில் தற்பொழுது புதிதாக 11 டூ 12 எனும் மதுபான கடை ஒன்று தொடங்கப்பட உள்ளது அதற்கு அருகிலேயே கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. அந்த கடைக்கு எதிர்ப்புறம் பொதுமக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வசித்து வருகின்றனர். ஐயா கடந்த 2017 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் கைதானவர்களில் மகளிர் உட்பட 34 நபர்களில் கைதான 24 நபர்களில் நானும் ஒருவன் மேலும் எங்களது கட்சிக்காரர்கள் எட்டு நபர்கள். மேலும் நாங்கள் இந்த வழக்கில் 28 நாட்கள் கோவை மத்திய சிறையில் சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளோம். இந்த இடத்திற்கு மதுபானகடை கட்டுமான பணிக்கு ஊராட்சி அனுமதி வழங்க கூடாது என்றும்.எங்கள் பகுதியில் வேறு மதுக்கடைகள் மற்றும் மது கூடங்கள் வரக்கூடாது என்று முதலிபாளையம் பகுதியில் கிராமசபை கூட்டத்தில் 58/2017 ( 01/05/2017) தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஆதலால் தாங்கள் இதுபோன்ற மதுக்கூடம் எங்கள் ஊராட்சி பகுதியில் அமைய தடையை விதித்து எங்கள் ஊராட்சி பொதுமக்களுக்கு நன்மை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அந்த மனுவில் கூறியிருந்தார்

Spread the love