ஜாகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள புளோரஸ் தீவுப் பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, இந்த நில அதிர்வு கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மிகவும் ஆழமற்ற பகுதியில் ஏற்பட்டுள்ளது.
எண்டே நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 68 கிலோமீட்டர் தொலைவில் கடற்பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள், வீடுகள் மற்றும் துறைமுகப் பகுதிகள் பலத்த சேதமடைந்ததுடன், இடிபாடுகளில் சிக்கிபலர் காயமடைந்திருப்பதாகவும், சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்ததால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு உயர்ந்த மேடான பகுதிகளுக்கும் தெருக்களுக்கும் தஞ்சம் அடைந்தனர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு திறந்தவெளிகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாகக் கடல் மட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்தான மாறுதல்கள் ஏதும் ஏற்படாததால் சில மணிநேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பசிபிக் பெருங்கடலின் அதிதீவிர நில அதிர்வு மண்டலமான “நெருப்பு வளையத்தில்” இந்தோனேசியா அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்ற போதிலும், 6.1 ரிக்டர் அளவு வரையிலான தொடர் நில அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருவதால் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
New
https://csync-global.smartadserver.com/3668/CookieSync.htmlhttps://csync-global.smartadserver.com/2161/CookieSync.htmlhttps://csync-global.smartadserver.com/2058/CookieSync.html

More Stories
ஹோர்முஸ் நீரிணையில் UAE-யின் இரு வணிக கப்பல்களை தாக்கிய ஈரான்.! போரை தீவிரப்படுத்த போவதாக அமெரிக்கா எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – ஈரான், அமெரிக்கா பரஸ்பரம் உரிமை கோரல்
வங்கதேச அதிபர் தேர்தல்: ஆளும் பிஎன்பி கட்சி வேட்பாளர் அறிவிப்பு