May 27, 2026

இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 10 வாகனங்கள் சிறை பிடிப்பு.

நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகமான மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவைநாதன் அவர்களது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.A.செல்வகுமார் அவர்கள் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டார்,

இதில் 1. மங்களபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு சோதனை மேற்கொண்டதில் மூன்று டாட்டா ஏஸ் வாகனங்கள் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்டதால் மங்களபுரம் காவல் நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது,  அதேபோன்று 2. ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட மூன்று டாட்டா ஏஸ் வாகனங்கள் மற்றும் ஒரு பயணியர் ஆட்டோ ரிக்க்ஷா வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ஆயில் பட்டி காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று 3. இராசிபுரம் பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டதில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட மூன்று டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர்  இராசிபுரம் பகுதி அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இச்சிறப்பு தணிக்கை மூலம்
1.மங்களபுரம் காவல் நிலையத்தில் -3 வாகனங்கள்
2. ஆயில்பட்டி காவல் நிலையத்தில்-4 வாகனங்கள்
3. ராசிபுரம் பகுதி அலுவலகத்தில் -3 வாகனங்கள்.
 மொத்தமாக 9 டாட்டா ஏஸ் வாகனங்களும் மற்றும் ஒரு பயணியர் ஆட்டோ ரிக்சாவும் என மொத்தம் பத்து வாகனங்கள்   சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது,

இந்த சிறப்பு தணிக்கை மூலமாக அரசுக்கு வருவாயாக சுமார் 3 லட்சம் ரூபாய் இணக்க கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வாகன சிறப்பு தணிக்கை இனிவரும் காலங்களில் மங்களபுரம்,ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர்,மற்றும் ராசிபுரம் போன்ற பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. M.பதுவைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Spread the love