April 25, 2026

உக்ரைன் போரில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: உக்​ரைன் போரில் 10 இந்தியர்கள் உயிரிழந்து இருப்​ப​தாக​வும் பலர் விருப்​பப்​பட்டு சென்​ற​தாக​வும் உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தகவல் தெரி​வித்​துள்​ளது.

இந்த விவ​காரம் தொடர்​பாக ரஷ்யா​வில் வசிக்​கும் திவ்யா தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: 26 இந்​தி​யர்​கள் சுற்​றுலா பயணி​களாக​வும், படிக்​க​வும் ரஷ்யா​வுக்கு கடந்த ஆண்டு செப்​டம்​பர், அக்​டோபரில் சென்​றனர். வேலை​வாய்ப்பு வழங்​கு​வ​தாக அழைக்​கப்​பட்ட அவர்களின் பாஸ்​போர்ட், அடை​யாள ஆவணங்​கள் பறிக்கப்​பட்​டு, மிரட்டி உக்​ரைனுட​னான போரில் ஈடுபடுத்தப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களை கண்​டறிந்து தாயகம் அனுப்பி வைக்​கும் நடவடிக்​கையை எடுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் கோரப்​பட்​டுள்​ளது. இந்த பொதுநல மனு உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய​காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்​தது.

அப்​போது மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்​வர்யா பாட்டி தாக்​கல் செய்த மனு​வில் ‘‘26 நபர்​களில் 10 பேர் உக்​ரைன் உடனான போரில் உயிரிழந்து இருப்​ப​தாக​வும், உயிரிழந்தோரின் குடும்​பங்​களு​டன் வெளியுறவுத்துறை அமைச்​சகம் தொடர்​பில் இருப்​ப​தாக​வும், உக்​ரைன் உடனான போரில் பலர் விருப்​பப்​பட்டு சென்​றிருப்​ப​தாக​வும், சில ஏஜெண்​டு​கள் தவறாக வழி நடத்தி இருக்க கூடிய சம்​பவங்​களும் இருப்​ப​தாக​வும், ரஷ்யா​வுக்கு 215 இந்​தி​யர்​கள் சென்​றிருப்​ப​தாக​வும்’’ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விவ​காரத்​தில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்​கைகளை நிலை அறிக்கை தாக்​கல் செய்ய வெளி​யுறவு அமைச்சகத்துக்கு உத்​தர​விட்டு வி​சா​ரணையை உச்​ச நீதிமன்​றம்​ தள்ளி வைத்​துள்​ளது.

Spread the love