திருப்பூர், ஜூலை 26 –
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் அமைந்துள்ள கே.எம்.சி. சட்டக்கல்லூரி சார்பில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற மாரத்தான் போட்டி மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
சட்டக்கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை சதீஷ் துணை ஆட்சியர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள, பெருமாநல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) த இரா.குமார் காவல் ஆய்வாளர் திருமதி. அம்பிகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.பெருமாநல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) உடல்நலத்தைப் பேணுவதற்கு அனைவரும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மருத்துவ உதவியை நாட வேண்டிய நிலை பெருமளவில் குறையும் என்றும் அறிவுறுத்தினார்.இந்த மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மாரத்தான் போட்டியின்போது கே.எம்.சி. சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் மரம் வளர்ப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகள் கொண்டு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ₹72,000 ரொக்கப் பரிசுத் தொகுப்பு, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாரத்தான் ஓட்ட வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.மேலும், சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் கே.எம்.சி. சட்டக்கல்லூரி, தரமான மற்றும் சிறந்த சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருவதுடன், சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.எம்.சி. சட்டகல்லூரியின் தாளாளர் திருமதி. ஜி. அருணா ஸ்ரீதேவி, செயலாளர் செல்வி. ஜி. ஞான வர்ஷினி, கல்லூரி முதல்வர் திருமதி. சுமிதா நிஷார் செயல் அலுவலர் சசிகாந்த் மற்றும் பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம், போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, கோவர்த்தனா நிறுவனம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், இந்த மாரத்தான் போட்டி சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற பெருமாநல்லூர் போக்குவரத்துக் காவல்துறையினர் சிறப்பான ஒத்துழைப்பையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்கினர். நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்புடனான பணியையும் வழங்கினர்.

More Stories
அருள்மிகு சுந்தரமாகலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் தாணிப்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் 25-7-2026
ஜூலை 26, ஈரோடு: பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. 7 வயது சிறுமிக்கு முழங்கால் பகுதியில் வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எலும்புத் தொற்று எனக் கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இங்கு திசு பரிசோதனை செய்ததில் (Tissue Analysis), தீவிர தன்மை கொண்ட எலும்புப் புற்றுநோய் Osteosarcoma இருப்பது உறுதி செய்யப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து, புற்றுநோய்க் கட்டியை முழுமையாக அகற்றியதோடு, எதிர்காலத்தில் கால் இயல்பான செயல்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி பேரணி