1980-ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஒட்டன்சத்திரம் ஜூன்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1980 ஆம் ஆண்டுகளில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களில் 60 பேர் ஒன்றாக இணைந்து கே.ஆர்.ஜி பாய்ஸ் ஆஃப் எய்ட்டீஸ் என்ற பெயரில் வாட்ஸ் ஆஃப் குழுவில் இணைந்து செயல்படுகின்றனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு தங்களால் இயன்ற ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்குள் நிதி சேகரித்து தாங்கள் படித்த கே.ஆர்.ஜி பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மற்றும் 2 ஆம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை கடந்த ஆண்டிலிருந்து வழங்கி வருகின்றனர்.
இரண்டாவது ஆண்டாக 2026 மாணவ செல்வங்களுக்கு நினைவு பரிசும் கல்வி ஊக்கத்தொகையும் கே.ஆர்.ஜி பாய்ஸ் ஆஃப் எய்ட்டீஸ் குழுவினரால் வழங்கப்பட்டது. எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் இந்த சேவையை மேலும் சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தவும் உறுதி மேற்கொண்டுள்ளனர்.

More Stories
திருநங்கைகள் காலனி நாகாத்தாள் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன் ஊர்வலம் ..
பழனியில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து,,
ஒப்பிலா மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு,,