September 23, 2026

கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து

 திருப்பத்தூர், ஜூன்.23-

திருப்பத்தூர் கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கந்திலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் S. முருகன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனிசாமி அவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு புடவை வேட்டி மற்றும் 100 பேருக்கு மரக்கன்றுகள் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. நல திட்ட உதவிகளை பெற்று கொண்ட தூய்மை பணியாளர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு இணைச் செயலாளர் T. V. ஜெகன் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கந்திலி ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய சார்பு நிர்வாகிகள் கண்டிலி கிழக்கு ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Spread the love