சென்னை: கருணாநிதியின் 103-வது பிறந்தநாளையொட்டி, தேனாம்பேட்டை, அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்படுகிறது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் நாளை கொண்டாடப்பட இருக்கிறார்கள். இந்நாளின் முக்கிய நிகழ்வாக, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நாளைய தினத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:
8.00 மணி: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
8.15 மணி: சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
8.30 மணி: சென்னை, கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
8.45 மணி: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
9.30 மணி: சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் கழகக் கொடி ஏற்றுதல், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைகள் திறப்பு

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு