
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்: பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் சொல்வதைக் கேட்டு எழுதுவதற்காக இதுவரை ஆசிரியர்களும், கல்வியாளர்களுமே ஸ்கிரைப்பாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், இந்தஆண்டு பொதுத்தேர்வு,திருப்புதல் தேர்வுகளில், கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை இப்பணியில் ஈடுபடுத்த அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
முறையான பயிற்சி இல்லாத நபர்களை தேர்வு எழுத்தர்களாக நியமிப்பது மாற்றுத் திறனாளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
எனவே, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து விட்டு, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு