கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு. ஒட்டன்சத்திரம் ஏப்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளிமந்தயத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் 136 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு தலித் விடுதலை இயக்க மாநில துணை தலைவர் தலித் கே.ராமர் தலைமை வகித்து டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு சட்டமாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சி.தங்கம்,தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் எஸ்.கருப்பையா, மாவட்டத் தலைவர் தேவத்தூர் கே.ராஜேந்திரன், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.மதுமோகன் மாவட்ட பொருளாளர் எஸ்.காளிமுத்து, தொப்பம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய பொருப்பாளர் செல்வகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மங்கள இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புகழைப்பாடும் வகையில் மங்கள இசை வாத்தியங்களுக்கான தவில்,நாதஸ்வர கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் வாசித்தனர். விழாவில் கலந்து கொண்ட சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்