டெல்லி: காவிரி நீர் திறந்துவிட ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி ஆணையம் இன்று அவசரமாக கூடுகிறது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் 4.5 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. செவ்வாய்க்கிழமை நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க பரிந்துரை செய்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் நீரை திறக்க முடியாது என்று அம்மாநில அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி நீர் திறந்துவிட ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி ஆணையம் இன்று அவசரமாக கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு