ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2025–2026 ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கீழக்கரையில் நவீன நூலகம், போக்குவரத்து காவல் நிலையம் அமைத்தல், நஞ்சில்லாத உணவு கிடைக்க நடவடிக்கை, புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து புறநகர் பேருந்துகளும் வந்து செல்லுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அரசு துறைகளில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது வழங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
செயலாளர் பாக்கர் அலி ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் விஜயராமு தணிக்கை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஜாகிர் உசேன், சீனி இப்ராஹிம், முகமது யூசுப், முத்துசாமி, மலராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
திராவிட முன்னேற்றக் கழகம் சாப்பில்முதல்-அமைச்சரின் ஆவண பேச்சை கண்டித்து திருப்பூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம்
தி லிட்டில் ப்ளவர் பள்ளியில் பெற்றோர்களை கொண்டாடுவோம் ஆசிரியர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.