June 10, 2026

கீழமுந்தலில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு 

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள கீழமுந்தல் கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகவும் சில காவல்துறையினர் அதற்கு துணை நிற்பதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். மது விற்பனையால் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், அதை தடுக்க வேண்டிய சில காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் புகார் தெரிவித்தனர். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், புகார் அளிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையின் உயர் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Spread the love