March 24, 2026

கும்பகோணில் ஸோஹோ ஈஆர்பி அறிமுகம் – இந்தியாவில் உருவான ERP, உலக சந்தையில் போட்டி”

கும்பகோணம் : ஸோகோ இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸோகோ ஈஆர்பி (Zoho ERP) சாஃப்ட்வேர் இந்திய வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார். சென்னை தலைமையிடமாக செயல்படும் Zoho நிறுவனம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் இந்த தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ERP, AI, லோ-கோட் மற்றும் நோ-கோட் வசதிகளுடன், எளிமையான செயல்பாடு மற்றும் குறைந்த செலவு மூலம் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குகிறது.

Zoho ERP நிதி மேலாண்மை, ஊதியம், பில்லிங், செலவு, விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் ஓம்னி-சேனல் வர்த்தகம் போன்ற செயல்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. இது ஜிஎஸ்டி, இ-இன்வாய்ஸிங், IFRS 15, ASC 606 போன்ற விதிமுறைகளுடன் உடன்பட்டு ஊதியம் மற்றும் வரி கணக்கீட்டில் தானியங்கி உதவி வழங்குகிறது. உற்பத்தி, விநியோகம், சில்லறை வணிகம் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிர்வகித்து வருமானத்தை தெளிவாக கண்காணிக்க முடியும்.

கும்பகோணில் Zoho நிறுவனம் 2020 முதல் உள்ளூர் திறமையாளர்களை பணியமர்த்தி வளர்ச்சி செய்து வருகிறது. Zoho CEO சைலேஷ் தவே மற்றும் நிதி, செயல்பாட்டுப் பிரிவு தலைமை சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் ERP முக்கிய குறிக்கோள்களை வெளிப்படுத்தினர். 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 2000 பேர் பணியிட வசதி கொண்ட பெரிய அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. Zoho Schools of Learning மூலம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி, கோடிங் வகுப்புகள், மருத்துவ முகாம் மற்றும் சமூக சேவை திட்டங்கள் தொடர்ந்துவருகின்றன.

Spread the love