November 7, 2026

கோவையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பெரியார் அறிவுலகம் – ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு!

ஒட்டன்சத்திரம் நவ.:

கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனையாக திகழ்கிறது என்று சமநீதி புரட்சி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கல்லை..,மு.த.ஈஸ்வரவேந்தன் பாராட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பில், கோவை காந்திபுரத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில், 1.98 லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பில், ரூ.301 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் ஏழு மாடிகளுடன் பெரியார் அறிவுலகம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

திறந்த புத்தக வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தில் ஸ்பேஸ் லிப்ட், மாய அறை, டைனோசர் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, விண்வெளியில் தலைகீழாக நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாய அறை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மேஜை, நாற்காலி, கதவு, புத்தக அலமாரி, கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் தலைகீழாக அமைக்கப்பட்டுள்ளன.

திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ என்ற தந்தை பெரியாரின் கொள்கையை முன்னிறுத்தி, அறிவை விரிவுபடுத்தும் நூலகங்கள் மற்றும் கல்வி சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவது பாராட்டுக்குரியது.

அந்த வகையில் திராவிட மாடல் அரசின் பெருமையை பறைசாற்றும் வகையில் கோவையில் பெரியார் அறிவுலகத்தை உருவாக்கிய தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமானமு.க ஸ்டாலினுக்கு பாராட்டு விழாநடத்துவது மிகவும் பொருத்தமானதாகும் என்று கல்லை..,மு.த ஈஸ்வரவேந்தன் தெரிவித்துள்ளார்.

 

Spread the love