November 11, 2026

சட்டமன்ற நேரலை: தனியாருக்கு 2 ஆண்டு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை ஒளிபரப்பு செய்வதற்காக, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரி அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளைப் பல கேமராக்கள் மூலம் முழுமையாகப் படம்பிடித்து, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளையும் மேற்கொண்டு, செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களின் உடனடி ஒளிபரப்புக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 80 நாட்கள் வீதம், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 160 நாட்கள் சட்டமன்ற நிகழ்வுகளைப் படம்பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Spread the love