October 26, 2026

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மழை காரணமாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்ட நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இங்கு ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக அக்டோபர் 23 முதல் 26-ம் தேதி வரை மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர்கள் சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், வழக்கம் போல் கோயிலில் பவுர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

Spread the love