முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கவிருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்கவிழா திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையின் 17-வது முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த மே-10 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல்நாளே 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்புப் படை உருவாக்கம் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம் உள்ளிட்ட 3 கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார்.
இத்திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மே 11-ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், ஐஜி தலைமையில் 1 எஸ்.பி, 2 டி.எஸ்.பி மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் எனவும் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்காணித்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தசூழலில் தான், இந்த திட்டத்தின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி கே. பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

More Stories
மாநில கட்சிகள் வருமானம் 51% சரிவு.. வெளியானது 2024-25 நிதியாண்டு தரவுகள்!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்த எடப்பாடி பழனிசாமி – காரணம் என்ன?
மம்தா அரசின் திட்டம் | 30 லட்சம் பயனாளிகளை நீக்கிய புதிய பாஜக அரசு!