May 28, 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சீருடையின் சிறப்புகள் – லோகோவை கவனிச்சீங்களா?

Singappen Sirappu Athiradi Padai Uniform: தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றும் பெண் காவலர்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக இந்தப் படைக்கு என்றே தனி லோகோவுடன் கூடிய பிரத்யேகமான சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றும் பெண் காவலர்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக இந்தப் படைக்கு என்றே தனி லோகோ, தனி ரோந்து வாகனங்களுடன் தற்போது பிரத்யேகமான சீருடையும் வழங்கப்பட உள்ளது. அந்த சிங்கப்பெண் சீருடையின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

பெண்களின் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு

தமிழக வெற்றிக் கழக அரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய். இதனால், தமிழகத்தில் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பொறுப்புடன் மேற்கொண்டு வருகிறார்.

  

அதன்படி, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த திட்டம் தான் சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை திட்டம். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களின் கோப்புகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்

முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மிகக் கடுமையான சிறப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையை நிர்வகிக்க ஐஜி அந்தஸ்தில் ஒரு உயர் அதிகாரி தலைமையேற்பார்.

மேலும், ஒரு எஸ்.பி, இரண்டு டி.எஸ்.பிம் நான்கு இன்ஸ்பெக்ட்டர்ஸ் மற்றும் எட்டு சப்இன்ஸ்பெக்ட்டர்ஸ் என மொத்தம் 36 பேர் இடம்பெற்றுவார்கள் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்தது. அதன்படி, இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சீருடை

இந்தப் படையை முதலமைச்சர் விஜய் விரைவில் துவங்கி வைக்க இருக்கும் நிலையில், இப்படையின் கீழ் பொறுப்பு வகிக்க இருக்கும் பெண் காவலர்களுக்கு வழக்கமான காக்கி சீருடைக்கு பதிலாக நவீன கமாண்டோ பாணியிலான பிரத்யேக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, இந்த சீருடையின் வண்ணங்கள் குறித்து பார்ப்போம்.

  • சட்டை – நேவி ப்ளூ (அடர் நீலம்) நிற அரைக்கைச் சட்டை
  • பேண்ட் – வழக்கமான காக்கி நிற முழுப் பேண்ட்
  • தொப்பு – கருப்பு நிறத் தொப்பி

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சீருடை சிறப்பம்சங்கள்

Camouflage/Tactical pattern இல் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடைகள், பகல் மற்றும் இரவு நேர அதிரடி நடவடிக்கைகளுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பிரத்யேக சீருடையின் இடது மார்பு பகுதியில் தைரியம், வேகம் மற்றும் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் சிங்கத்தின் முகம் லோகாவாக பொறிக்கப்பட்டுள்ளன.

வலது மார்புப் பகுதியில் தங்க எழுத்துக்களுடன் கருப்பு வெல்க்ரோ பெயர்ப் பலகையும், இரண்டு தோள்பட்டைகளிலுமே இரண்டு சில்வர் நட்சத்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேசமயம், கருப்பி நிற தொப்பியில் மெட்டலால் ஆன லோகவும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், கருப்பு நிற பெல்ட் மற்றும் கருப்பு நிற காலணிகள் பணிக்கேற்ற வகையில் இலகுவாகவும் வசதியாகவும் வழங்கப்படவுள்ளது.

Spread the love