சென்னை: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏஜிஓஆர்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் ரக்சில் (2-வது நிமிடம்), ஹலிசோ (8-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
வருமான வரித்துறை அணி சார்பில் நரேஷ், 48-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். மற்றொரு போட்டியில் தாவூத் மெமோரியல் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆக்டோபஸ் மரைன் எஃப்சி அணியை தோற்கடித்தது. தாவூத் அணி சார்பில் வசந்த் குமார் 31, 37, 57-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்தார். ஆக்டோபஸ் அணி சார்பில் தனிஷ் 90+1-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.

More Stories
“ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது” – ஸ்டீபன் பிளெமிங் மனம் திறப்பு
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை