சூர்யா – 47 திரைப்படம் குறித்து…
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதனையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், “சூர்யா – 47 திரைப்படம் முழுக்கவே தமிழ்ப் படமாகவே தயாராகி வருகிறது. நடிகர் நஸ்லன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், இப்படம் முழுமையான தமிழ்ப்படமாகவே உருவாகவுள்ளதால் சூர்யா ரசிகர்களிடம் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

More Stories
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy
மதுரை பின்னணியில் ஜீவா நடிக்கும் படம்! | Jiiva | Lark Studios
சூரியின் `மண்டாடி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Soori | Mandaadi